தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த கிருபா என்பவரின் மகன் ஸ்டாலின் கிருபா என்பவர் பெங்களூருவில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 8ம் தேதி சொந்த ஊர் சென்ற அவர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் , உறிவனர்கள் சென்று பார்த்தபோது ஸ்டாலின் கிருபாவின் உடைகள் மட்டும் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை கிருபா தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வீரர்கள் நீண்ட நேரம் போராடி ஸ்டாலின் கிருபாவை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day