திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி திருப்பூரில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார வாகனத்தை மறித்து கழகத் தொண்டர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒன்றுபட்ட வலிமைமிக்க அஇஅதிமுகதான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தி வருகிறார். அவரது கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், கழக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட அனைவரும் கழகம் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் காந்திநகர் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி வந்த பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்ட திரளான கழகத் தொண்டர்கள், கழகம் ஒன்றிணைய வேண்டும் என முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கழகம் ஒன்றிணைய வேண்டும், பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்மை தொண்டர்கள் என வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day