நடிகை அருணா வீட்டில் ED ரெய்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

இயக்குனர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் உட்பட பல்வேறு படங்களில் நடித்த நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நீலாங்கரை கப்பலீஸ்வரர் தெருவில் உள்ள நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நடிகை அருணாவின் கணவர் மன்மோகன் குப்தா கட்டிட பொறியாளராகவும், தொழிலதிபராகவும் உள்ள நிலையில், அவர் பண பரிவர்த்தனையை முறையாக மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் மூன்று வாகனங்களில் சென்ற 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகை அருணா வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Night
Day