நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு : பதில் அளிக்கும்படி லைகா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க லைகா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'விஷால் பிலிம் பேக்டரி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் செலுத்தியது. அந்த தொகையை விஷால் திருப்பி தராததால் அவர் மீது லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரத்னம் பட நிறுவனம் விஷாலுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளமான இரண்டு கோடியே 60 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் கே.ஜி. திலகவதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்கு லைகா நிறுவனம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Night
Day