ரூ.109.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் இதுவரை 109.76 கோடி ரூபாய்  மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தல் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு மாநில அளவிலான செலவின பார்வையாளராக பாலகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டு அவர் தமிழகம் வந்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் அவர் பயணம் செய்து செலவினங்களை கண்காணிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். கருணாநிதி நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒளிபரப்பபடும் ஒளி ஒலி காட்சிகளை நிறுத்த கோரி எதிர் கட்சிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார். 

Night
Day