நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

எழுத்தின் அளவு: அ+ அ-

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் வழக்கில், கடந்த 23ஆம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26ஆம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி,  ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிரித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரது சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி நிர்மல் குமார் உத்தரவிட்டார். மேலும், மறு உத்தரவு பிறபிக்கும் வரை இருவரும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து நீதிபதி ஆணையிட்டார். 

Night
Day