மாணவர் செழியனின் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மாணவி மற்றும் மாணவனின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

செம்மங்குப்பம் அருகே மூடப்படமால் இருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வாகனம் மீது பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 5 பேரில் 11ம் வகுப்பு மாணவி சாருமதி, அவரது சகோதரனான மாணவன் செழியன், தொண்டமாநத்தை சேர்ந்த 6 ஆம் வகுப்பு மாணவன் நிவாஸ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
 
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில், சாருமதி மற்றும் அவரது சகோதரன் செழியனின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து இருவரின் உடல்கள் சொந்த ஊரான சின்னகாட்டு சாகை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்ட உடல்களை பார்த்து கிராம மக்கள், உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. 

Night
Day