சினிமா
ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்தினால் தீங்கு விளைவிக்காது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினி முக்கிய வேடத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் "திமிறி எழுடா" என்ற பாடல் வெளியாகவுள்ளது. இப்பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்கிய மற்றும் ஷாஹுல் ஹமீது ஆகியோரது குரல் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பேசுபொருளானதை தொடர்ந்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அவர்களது குடும்பத்தினரிடமிருந்து முறையான அனுமதி பெற்று, அதற்கான தொகையை வழங்கியதாகவு குறிப்பிட்டுள்ளார். மேலும், தொழில்நுட்பம் முறையாக பயன்படுத்தினால் நிச்சயம் தீங்கு விளைவிக்காது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...