கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார்.

1985ஆம் ஆண்டு வெளியான 'ஆண் பாவம்' திரைப்படத்தில் நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி அம்மாள். அதனைத் தொடர்ந்து ஆயுசு நூறு, ஏட்டிக்கு போட்டி, கோபாலா கோபாலா, கபடி கபடி உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். ஆண் பாவம், ஏட்டிக்கு போட்டி, ஆஹா என்ன பொருத்தம் ஆகிய படங்களில் கொல்லங்குடி கருப்பாயி பாடல்கள் பாடியுள்ளார். மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவிடம் கருப்பாயி அம்மாள் கலைமாமணி விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மறைவையொட்டி திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Night
Day