நீட் தேர்வு முடிவுகள் வெளியானது

எழுத்தின் அளவு: அ+ அ-

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.

நாடு முழுவதும் கடந்த மே மாதம் 4ம் தேதி எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்களும், தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியரும் நீட் தேர்வை எழுதினர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது. மாணவர்கள் இந்த விடைக்குறிப்பு குறித்த தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் நிறைவடைந்தது. 

மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும். இந்த நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day