ஆர்ஆர்ஆர் சிறந்தபடம் மட்டுமின்றி சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பது மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் RRR திரைப்படம் சிறந்த படம் மட்டுமின்றி சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஜேம்ஸ் கேமரூன் பாராட்டியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற சேட்டர்ன் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி சந்தித்து கொண்டனர். அப்போது சுமார் ராஜமெளலியுடன் 10 நிமிடங்களுக்கு மேல் பேசிய ஜேம்ஸ் கேமரூன், RRR திரைப்படம் குறித்து வெகுவாக பாராட்டியுள்ளார். ராஜமெளலியின் RRR திரைப்படம் ஒரு சிறந்த படைப்பாக இருப்பதோடு, ஒரு இந்திய திரைப்படத்திற்கு சர்வதேச அரங்கில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார். இதற்கு எஸ்.எஸ்.ராஜமெளலி தனது இன்ஸ்டா பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

varient
Night
Day