அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் ஆபாச பட நடிகை எமிலி வில்லிசுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கலிஃபோர்னியாவில் உள்ள பிரபல மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருடைய கிச்சைக்கு அதிக தொகை தேவைப்படுவதால் நிதியுதவி தருமாறு அவரது சகோதரர் மைக்கேல் வேண்டுகோள் வைத்துள்ளார். இன்ஸ்டாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்ட எமிலிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை பின் தொடர்பவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் மியாமியை சேர்ந்த ஆபாச பட நடிகை சோபியா லியோன் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில், தற்போது எமிலிக்கும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஆபாச பட உலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

varient
Night
Day