அஜித் '53'... கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழிலில் அமராவதியில் தொடங்கி துணிவு வரை 61 படங்களை நிறைவு செய்துள்ளார் நடிகர் அஜித். சினிமாவில் கதாநாயகனாக அவருக்கு 30வது வருடம் இது. மே 1ஆம் தேதியான இன்று நடிகர் அஜித்தின் 53 வது பிறந்தநாள். ரசிகர்கள் கொண்டாடும் இந்நாளில் அஜித் குறித்த சில தகவல்களை காணலாம்...

சினிமாவில் 60 படங்களை கடந்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித் நடிக்க வருவதற்கு முன்பு தன்னுடைய ஆரம்ப காலத்தில் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்தார். பின்னர் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்த அவர் அவ்வப்போது விளம்பர படங்களிலும் நடித்து வந்தார்.

தன் வாழ்நாளில், ஓவ்வோரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணியும் தானாக செதுக்கி கொண்டு வாழ ஆரம்பித்த அஜித் ஆயிரம் வலிகளை கண்டாலும் இன்று அந்த வலிகளும் அதனால் ஏற்பட்ட அடக்கமும் தான் அவரை இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் உயர்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. 

அவருடன் பிறந்த சகோதரர்களுக்கு கல்வி எளிதாக வந்த நிலையில் அஜித் மட்டும் படிப்பில் மந்தமாக இருந்ததால் 10ஆம் வகுப்போடு பள்ளி படிப்பை கைவிட்டுள்ளார். படிப்பு நம் அனைவரது வாழ்க்கையிலும் மிக முக்கியம் என கூறும் அஜித், தான் படிக்காமல் போய் விட்டது குறித்து பின்னாளில் பல முறை வருத்தப்பட்டதும் உண்டு. தன்மானம் மிக முக்கியம். நீங்கள் விரும்பிய வேலையை முழு மூச்சாக செய்யுங்கள்' என்பது தான் தன் ரசிகர்களுக்கு அஜித் கொடுக்கும் 'ஆல்டைம் அட்வைஸ்'

உண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு 'தீனா' படத்தில் நடிகரும் ஸ்டன்ட் கலைஞருமான 'மகாநதி' சங்கர் தான் அஜித்தை 'தல' என்று அழைப்பார். அதற்கு பிறகே அவரை ரசிகர்கள் தலை என கொண்டாட ஆரம்பித்தனர்.

ஒருகட்டத்தில் நடிகர் அஜித் தன்னை 'தல' என்ற அடைமொழியோடு இனி அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையிலும் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட அவரது ரசிகர்கள் என்றுமே தயங்கியதில்லை. 

இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளான இன்று, ஒரு புறம், பில்லா மறுபுறம் தீனா என அவருடைய ஹிட் அடித்த படங்கள் தமிழத்தில் பல்வேறு திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆக, கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள் பட்டாளம். 

Night
Day