எழுத்தின் அளவு: அ+ அ- அ
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி தம்பதியை சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதி 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜராகிய நிலையில் இருவரும் சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேசும்படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.