எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை பரங்கிமலையில் 6 வயது மகளை கழுத்தறுத்து கொலை செய்த தந்தையை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயனாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பரங்கிமலையில், தனது 6 வயது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மகளை கொலை செய்த குற்றத்திற்காக சதீஷ்குமாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் மகிளா நீதிமன்ற நீதிபதி தீபிகா உத்தரவிட்டார். இதனையடுத்து ராயப்பேட்டையில் சிகிச்சை பெற்றுவந்த சதீஷ்குமார், கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.