11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை வில்லிவாக்கம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

சிட்கோ நகரில் வசித்து வரும் 11 வயது சிறுமியின் பெற்றோர் கூலிவேலைக்கு சென்றபின் சிறுமி தனது பாட்டியின் கண்காணிப்பில் இருந்துள்ளார். இதனை பயன்படுத்தி, அவரது உறவினர்களான 14 வயதுடைய 2 சிறுவர்களும், டைலர் குமார் என்ற 51 வயது முதியவரும் கடந்த 6 மாதங்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதனால் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் விசாரித்தபோது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில், வில்லிவாக்கம் மகளிர் போலீசார் 2 சிறுவர்கள் மற்றும் டைலர் குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Night
Day