11 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சைதாப்பேட்டையில் 11ம் வகுப்பு மாணவனை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரை சேர்ந்த சஞ்சய் என்ற மாணவன் கோடை விடுமுறை என்பதால் வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் விநியோகம் செய்து வரும் வேலையை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் வேனில் இருந்து தண்ணீர் கேனை சஞ்சய் இறக்கி கொண்டிருந்தார். அப்போது, சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், ஜெபா, முகேஷ் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் அவரை சரிமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. படுகாயமடைந்த சஞ்சய் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Night
Day