வால்பாறைக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை

எழுத்தின் அளவு: அ+ அ-

அதிகனமழை எச்சரிக்கையையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கோவை மற்றும் நீலகிரி வந்துள்ளனர்.

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் அதிகன மழைக்கான ரெட் அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழையும், லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 

இதேபோன்று தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் ஒரு குழுவினர் கோவை வந்துள்ளனர். கோவை, வால்பாறை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கோவை மாநகர் பகுதிகளிலும் இந்த குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். 

இதுமட்டுமின்றி, கோவையில் பலத்த மழை பெய்தால் அதிகளவு பாதிக்கப்படும் பகுதியான சிவானந்த காலனி மேம்பாலம், ரயில் நிலையம் மேம்பால பகுதி, உப்பிலிபாளையம் மேம்பால பகுதி கிக்கானி பள்ளி மேம்பால அடியில் மழைநீர் தேங்காதவாறு தேவையான முன்னெச்சரிக்கையுடன் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day