வேலூர்: மடிக்கணினிகள் திருட்டு - ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனியார் பல்கலைகழகம் அமைந்துள்ள பகுதியில் மடிக்கணினிகளை திருடிவந்த  இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். தனியார் பல்கலைக்கழக பகுதியில் அடிக்கடி மடிக்கணினிகள் திருட்டு போவதாக காட்பாடி காவல் நிலையத்துக்கு வந்த தொடர் புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். பல்கலைக்கழகத்தின் 11-வது நுழைவாயில் அருகே பையுடன் வந்த நபரை அழைத்து விசாரித்த போது, சுற்றுவட்டார பகுதிகளில் மடிக்கணினி திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 12 மடிக்கணினிகளை பறிமுதல் செய்தனர்.

Night
Day