ராணிப்பேட்டை: சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்ட பழமைவாய்ந்த ஆலமரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் அருகே பழமை வாய்ந்த மரத்தை வேறு இடத்தில் நடுவதை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புரன்சாமேடு பகுதியில் ஆற்காடு - வேலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஆலமரம், சாலை விரிவாக்க பணிக்காக தோண்டி எடுக்கப்பட்டது. பழமை வாய்ந்த மரம் என்பதால், அப்பகுதி மக்கள் மரத்தை வேறு இடத்தில் நடும் பணியை மேற்கொண்டனர். அந்த இடம் தனியார் கல்லூரிக்கு சொந்தமானது எனக்கூறி போலீசார் தடுத்து நிறுத்தியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

varient
Night
Day