கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பழமை வாய்ந்த தி கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமசை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பேராயர் ரெவ் பால் ஸ்வரூப் தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்று பிரதமர் மோடி வழிபட்டார். மேலும், தொட்டிலில் வைக்கப்பட்டுள்ள குழந்தை இயேசுவின் உருவச் சிலையையும் பிரதமர் மோடி தரிசித்தார். இந்த பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். 

varient
Night
Day