கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மோதி தீ விபத்து - 17 பேர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் சொகுசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உடல்கருகி 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் இருந்து சிவமொக்கா மாவட்டத்திற்கு 32 பேருடன் புறப்பட்ட சொகுசு பேருந்து, சித்ரதுர்கா மாவட்டத்தின் கோர்லத்து அருகே சென்று கொண்டிருந்தது. அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால் மறுமார்கத்தில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, திடீரென டிவைடர் மீது மோதி எதிர்திசையில் வந்த சொகுசு பேருந்து மீது மோதியதாக தெரிகிறது. இதில் பேருந்திலும், கண்டெய்னர் லாரியிலும் தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்தது.

பேருந்தில் பயணித்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியான நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 17ஆக உயர்ந்தது. பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Night
Day