சென்னை சாந்தோமில் புனித தோமையார் திருத்தல பேராலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னை சாந்தோம் மற்றும் பெசன்ட் நகர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவ மக்கள் பங்கேற்று கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இயேசு பிறந்த தினமான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை சாந்தோம் புனித தோமையர் திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பு பெருவிழா வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை சாந்தோம் பேராலயத்தின் முகப்பில் வைக்‍கப்பட்டுள்ள 25 அடி உயர ராட்சத வடிவிலான கிறிஸ்மஸ் மரம் மற்றும் குடில் பார்வையாளர்க​ளை வெகுவாக கவர்ந்தன.

சென்னை பெசன்ட் நகர் சின்ன வேளாங்கண்ணி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. தேவாலயத்தில் குவிந்த பக்தர்கள் சிறப்பு திருப்பலியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.


Night
Day