திருவண்ணாமலையில் கார் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து - 3 பேர் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அருகே வேங்கிகாலை சேர்ந்த சக்திவேல் என்பவர் உடல்நிலை சரியில்லாத மாமியார் பவுனு அம்மாள் உடன் விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார். திருவண்ணாமலை அருகே ராஜந்தாங்கல் கிராமம் அருகே செல்லும்போது காரும், அரசுப் பேருந்தும் மோதி விபத்துள்ளானது. இதில் சம்பவ இடத்தில் ஒருவரும், மருத்துவமனையில் இருவரும் என 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Night
Day