வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் தங்கநகைகளை திருட்டு - கொள்ளையர்கள் 3 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தின் வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் தங்கநகைகளை திருடிசென்ற கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

நேரு நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது வீட்டில் கடந்த 4 ஆம் தேதி புகுந்த கொள்ளையர்காள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 48 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த 3 சைக்கிள்களை திருடி சென்றனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட வந்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட ராமமூர்த்தி, மணிகண்டன், கார்த்திக் ஆகிய 3 பேரும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தையும் மீட்டனர். மேலும், திருட்டுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனம்  பறிமுதல் செய்தனர்.

Night
Day