தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தலைமைச்செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்திற்கு தொலைபேசி மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் அரசு ஊழியர்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அறை,  சட்டப்பேரவை நடைபெறும் இடம் என கட்டிடம் முழுவதும் சோதனை செய்தனர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்ததையடுத்து, தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day