கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளி மதிய உணவில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜம்பை அரசு நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணாக்கர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

ஜம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை 100க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் மாணாக்கர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவில் பல்லி விழுந்து இருந்தது தெரியாமல் உணவை உட்கொண்ட 50க்கும் மேற்பட்ட மாணாக்கர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனயைடுத்து மாணாக்கர்கள் அனைவரும் மணலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து அங்கு குவிந்த பெற்றோர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லையெனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெற்றோர் வாக்குவாதத்தை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்து மாணாக்கர்களும் 3க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஜம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணாக்கர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Night
Day