பொட்டலூரணியில் பேருந்து நிறுத்த வலியுறுத்தி மக்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி விலக்கு பகுதியில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொட்டலூரணி பகுதியில் பேருந்துகள் நிற்காததால்  அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதியில் பேருந்து நிற்க வலியுறுத்தி கடந்த 2 ஆம் தேதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பேருந்து நிற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள்  தெரிவித்தால் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day