காதலித்து திருமணம் செய்த இளம்பெண் மர்மமரணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ஏரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்த பரத் என்பவரும், பொம்மிடி தாசரஹள்ளியைச் சேர்ந்த ஸ்ரீபிரியாவும் கடந்த 2019ல் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தனர். சம்பவத்தன்று இரவு தம்பதியினருக்கிடையே வரதட்சணை தொடர்பாக சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவி ஸ்ரீபிரியா சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இதுதொடர்பாக மகளை காணவில்லை என அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் தருமபுரி ராமக்காள் ஏரியிலிருந்து ஸ்ரீ பிரியா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கணவரையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்து விசாரிக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனக்கூறி இறந்த பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.

Night
Day