இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - மேலும் ஒருவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

ராணிப்பேட்டை அருகே இரவில் தனிமையாக இருந்த காதல் ஜோடியை வழிமறித்து காதலனை தாக்கி இளம் பெண்ணிடம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். 

தெங்கால் பாலாற்றங்கரை அருகே அரசுக்கு சொந்தமான தென்னை பண்ணை அமைந்துள்ளது. இங்கு காதல் ஜோடி தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவ்வழியாக வந்த 3 பேர் கொண்ட கும்பல் காதல் ஜோடியை வழிமறித்து காதலனை தாக்கி இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day