எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை நெற்குன்றம் பகுதியில் வரலட்சுமி என்பவரின் 4 சவரன் நகை திருடு போன சம்பவத்தில் நரியும்பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவியை போலீசார் கைது செய்தனர்.
நெற்குன்றம் பகுதியை சேர்ந்த வரலட்சுமி என்பவர் ஜூலை 14ம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்தில் பயணம் செய்து கோயம்பேடு வெங்காய மண்டி பேருந்து நிலையத்தில் இறங்கி வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் தான் கொண்டு சென்ற டிராவர் பையை திறந்து பார்த்த போது 4 சவரன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டதாக கூறி திருப்பத்தூர் மாவட்டம் நரியும் பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவி பாரதியை போலீசார் கைது செய்தனர். கைதான பாரதி மீது வேலூர், ஆம்பூர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. கைதான பாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.