நெல் மூட்டைகளை சூழ்ந்த மழைநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்தன. 

புதிய விலை நிர்ணயிக்கப்பட்டதால் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி கொள்முதல் நிறுத்தப்பட்டு 1-ம் தேதி கொள்முதல் தொடங்கியது. ஆனால் ஆன்லைன் பிரச்சினை காரணமாக 2 நாட்களாக  கொள்முதல் பாதிக்கப்பட்டது. மேலும் நேற்று விடுமுறை என்பதால் தொடர்ந்து 8-வது நாளாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்தன. இந்நிலையில் நேற்று  இரவு பெய்த பலத்த மழையால் நெல் மூட்டைகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளன. இதனால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மழையை கருத்தில் கொண்டு 20% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day