எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோவை விமான நிலையத்தில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் உயர்ரக போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வான் நுண்ணறிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த பகத்மான் முஜீப் மற்றும் சுகையில் உபயதுல்லா ஆகியோரிடம் சோதனை நடத்தியதில், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக்ஸ் என்ற உயர்ரக போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கேரள மாநில பயணிகள் இருவரையும் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அதே விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம், பாண்டித்துரை சுப்பையா என்ற 2 பயணிகள் 18 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.