நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கொடுங்கையூரில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீ வாரியர் நகர் நாராயணசாமி கார்டனில் வசித்து வந்த மதன ஸ்ரீ என்பவர் மருத்துவராக வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு எழுதியிருந்தார். ஆனால் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்ததால், மதனஸ்ரீ மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவராக வேண்டும் என்ற கனவு தகர்ந்துபோனதால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு சென்ற கொடுங்கையூர் போலீசார் மதனஸ்ரீ-யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

Night
Day