திரையுலகில் 50 ஆண்டுகள் - ரஜினிக்கு பிரபலங்கள் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு, நடிகர்கள் கமல்ஹாசன், மம்முட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், வருகிற 15-ம் தேதியுடன் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை முன்னிட்டு திரையிலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திரைத்துறையில் 50 வருடங்கள் நிறைவு செய்யும் சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும், பாராட்டுடனும் கொண்டாடுவதாக கூறியுள்ளார். இந்தப் பொன் விழாவிற்கு ஏற்ற உலகளாவிய வெற்றியை கூலி திரைப்படம் பெற வாழ்த்துவதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். 

மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி வெளியிட்டுள்ள பதிவில், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த அன்புள்ள ரஜினிகாந்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். உங்களுடன் திரையைப் பகிர்ந்து கொள்வது உண்மையிலேயே ஒரு மரியாதை என்றும் கூலி திரைப்படத்துக்கு வாழ்த்துக்கள், எப்போதும் உத்வேகமாகவும் பிரகாசமாகவும் இருங்கள் என்றும் கூறியுள்ளார். 

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ஒரு நடிகராக எனது முதல் அடிகளை உங்கள் பக்கத்தில் எடுத்து வைத்தேன் என்று தெரிவித்துள்ளார். எனது முதல் ஆசிரியர்களில் ஒருவர் நீங்கள் என்று கூறியுள்ள அவர், தொடர்ந்து ஒரு உத்வேகமாக இருங்கள், 50 ஆண்டுகால திரை மேஜிக்கை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள் என்று வாழ்த்தியுள்ளார்.

Night
Day