வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும், இவை அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனால், திருவள்ளூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

வரும் 14 முதல் 18ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று முதல் 14ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Night
Day