கல்லூரியில் நாய்கள் கடித்து 6 மாணவிகள் காயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் சுற்றி திரியும் நாய்கள் கடித்ததில் 3 நாட்களில் 6 மாணவிகள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 கும்பகோணம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரியும் நிலையில், கடந்த 3 நாட்களில் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு மாணவிகளை நாய்கள் கடித்துள்ளன. இதில் காயமடைந்த மாணவிகளுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் பெற்றோர்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் வசிக்கும் பகுதி அருகே செயல்பட்டு வரும் அரசு கல்லூரியில் இந்த அவலம் நடந்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day