காஷ்மீர் பண்டிட் சமூக பெண் சர்லா பட் கொலை வழக்கு மீண்டும் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீர் பண்டிட் சமூக பெண் சர்லா பட் என்பவர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள ஜம்மு காஷ்மீர் சிறப்பு விசாரணை முகமை தடை செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் முன்னாள் தலைவரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிறப்பு விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கொலை வழக்கை விசாரித்த ஜம்மு காஷ்மீர் காவல்துறை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தோல்வியடைந்ததால் சிறப்பு விசாரணை முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது.

Night
Day