தெருநாய்களை அப்புறப்படுத்தும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பல தசாப்தங்களாக உள்ள மனிதாபிமானம் மற்றும் அறிவியல் பின்புலத்திலான கொள்கையின் பின்னடைவு என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான தனது எக்ஸ் பதிவில், குரலற்ற இந்த ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய பிரச்சினைக்குரியவை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பிடம், தடுப்பூசி, கருத்தடை ஆகியவற்றின் மூலம் தெரு நாய்களை பாதுகாப்பு அளிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். பொதுப் பாதுகாப்பு மற்றும் விலங்குகள் நலன் ஆகியவற்றை இணைந்து செயல்படுவதை நம்மால் உறுதி செய்ய முடியும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day