விக்கிரவாண்டியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

 இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற  இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த 10ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. இதனையொட்டி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப் பணமோ அல்லது பொருட்களோ எடுத்து செல்லப்பட்டால் அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் பறக்கும் படை குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day