வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விபரீத முடிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை அருகே திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன நிலையில், இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்லத்துக்குடி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விமல்ராஜ் - காவியா தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு நடைபெற்று வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று, விமல்ராஜ் வேலைக்கு சென்றநிலையில் , காவியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வரதட்சணை கொடுமையால் தான் காவியா தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன நிலையில் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Night
Day