தனியார் நிறுவன வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவன வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பென்னாங்கூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேன் நிறுத்தி வைக்கபட்டிருந்த போது திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் அதற்குள் வேன் முழுவதும் தீ  பரவி சேதம் அடைந்தது. முதல் கட்ட விசாரணையில் இஞ்சின் பகுதியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

Night
Day