எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் லாக்கப் மரணம் அடைந்த வழக்கு விசாரணை சிபிசிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர், காரில் இருந்த நகையை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு சந்தேகத்தின் பேரில் திருப்புவனம் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதில் காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அஜித்குமாரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி போலிஸார் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து அஜித்குமார் மரணத்துக்கு காரணமானவர்களாக கூறப்படும் 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அஜித்குமார் தப்பிக்க முயன்றபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, வழக்கை கொலை வழக்காக மாற்றி 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞர் அஜித்குமார் லாக்கப் மரணம் அடைந்த வழக்கு விசாரணை சிபிசிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.