சிறுமிக்கு பாலியல் தொல்லை - எஸ்.ஐ. மீது போக்சோ வழக்கு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக உதவி ஆய்வாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரின் மகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது காணாமல் போனதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், ஏரிக்கரை தெருவில் உள்ள ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜூ என்பவர் வீட்டில் சிறுமி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது சிறுமி மயக்க நிலையில் இருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, சிறுமியை மீட்ட பெற்றோர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். இது தொடர்பாக, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது புகாரை போலீசார் வாங்க மறுத்த நிலையில், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மருத்துவர்கள் அளித்த அறிக்கையின் பேரில் உதவி ஆய்வாளர் மீது போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Night
Day