ரெஸ்டோ பாரில் இளைஞர் கொலை - 7 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் ரெஸ்டோ பாரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாரின் உரிமையாளர் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மதுரை மேலூரை சேர்ந்த ஷாஜன் என்ற இளைஞர் தனது பிறந்தநாளை கொண்டாட தனது நண்பர்களுடன் கடந்த 9 ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது ஹோட்டல் ஊழியர்களுக்கு இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பார் ஊழியர் அசோக் ராஜ் என்பவர் கத்தியால் தாக்கியதில் மோஷிக் சண்முக பிரியன் என்ற இளைஞர் உயிரிழந்தார். காயமடைந்த ஷாஜின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், பார் உரிமையாளர் ராஜ்குமார், அசோக் ராஜா உள்ளிட்ட 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், நேரக்கட்டுப்பாட்டை மீறி பார் நடத்திய 13 ரெஸ்டோ பார்களின் உரிமைகளை தற்காலிகமாக ரத்து செய்து, அப்பார்களுக்கு கலால் துறையினர் சீல் வைத்தனர்.

Night
Day