திரிச்சூர் தொகுதியில் போலி வாக்காளர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தனது முகவரியில் ஒன்பது போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திரிச்சூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பூன்குன்னம் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா என்ற பெண், தான் மட்டுமே வசிக்கும் தனது வீட்டு முகவரியில் தனக்கு தெரியாமலேயே வேறு வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது முகவரியில் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களை சரிபார்க்க அதிகாரி ஒருவர் வந்தபோது தான் இந்த முறைகேடு தனக்கு தெரியவந்ததாகவும் அப்பெண் தெரிவித்தார். 

Night
Day