ரூ.1.89 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் மற்றும் 15 லட்சம் ரொக்கம் பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி ரயில்வே சந்திப்பில் ஒரே கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கோட்ட ஆணையர் டாக்டர் அபிஷேக், உதவி கோட்ட ஆணையர் பிரமோத் நாயர், ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் திருச்சி ரயில்வே சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சிக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த லட்சுமணன் என்பவரிடமிருந்து ஒரு கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் 15 லட்சம் ரொக்க பணத்தை கைப்பற்றினர். மேலும் லட்சுமணனுடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா போன்ற பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day