ரிதன்யாவின் மாமியார் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணைக் கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்த கொண்ட வழக்கில் தற்போது மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் மற்றும் மாமனார் இருவரையும் கைது செய்த போலீசார் உடல்நிலையைக் காரணம் காட்டி மாமியாரை கைது செய்யவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரிதன்யாவின் தந்தை மற்றும் உறவினர்கள் உடல் நிலையைக் காரணம் காட்டியது ஏற்புடையதல்ல என்றும் மாமியாரையும் கைது செய்ய வேண்டும் என்று கடந்த 28ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியை சேவூர் போலீசார் இன்று கைது செய்தனர். 

இதனிடையே ரிதன்யாவின் கணவர் கவின்குமாருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று திருப்பூர் நீதிமன்றத்தில் ரிதன்யாவின் தந்தை தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கவின்குமார் தரப்பில் கால அவகாசம் கேட்டதால் விசாரணையை 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Night
Day