மும்பை விமான நிலையத்தில் ரூ.10.60 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவில் இருந்து தாய்லாந்து புறப்பட தயாரான விமான பயணியிடம் இருந்து, சுமார் 10 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பிலான வைரம் மற்றும் தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான பயணி ஒருவரிடம், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் திண்பண்டங்களுக்கு இடையே வைரம் மற்றும் தங்க ஆபரணங்கள், வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றை மறைத்து எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day