எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரையில் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் முது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை உள்ள தனியார் பள்ளியில் அசிரியராக பணியாற்றும் பெண்ணுக்கும் மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பூபாலன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், திருமணத்தின் போது, வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகை மற்றும் பணத்துடன் கூடவே, மேலும் பல லட்ச ரூபாய், நகை கூடுதலாக வேண்டும் என கணவர் வீட்டார் கேட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், காவலர் பூபாலன் வரதட்சனை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த ஆசிரியை மதுரை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கணவர் பூபாலன் மற்றும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அவரது தந்தை செந்தில்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மனைவியை கொடுமைப்படுத்தியது தொடர்பாக பூபாலன் அவரது தங்கையிடம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.